close
Choose your channels

ராம்சரணை அடுத்து ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்!

Thursday, February 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கிய ’2.0’ என்ற திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் ஷங்கரின் அடுத்த படம் இன்னும் வெளியாகவில்லை. அவர் இயக்கி வந்த ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் தற்போது ஷங்கர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராம் சரண் தேஜா படத்தை முடித்துவிட்டு ஷங்கர் பாலிவுட் செல்ல இருப்பதாகவும் அவருடைய இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சமீபத்தில் சென்னை வந்த ரன்வீர்சிங் ஷங்கரை சந்தித்து கதை கேட்டதாகவும் அந்த கதை அவருக்கு பிடித்ததை அடுத்து அந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனவே ராம்சரண் தேஜா படத்தை முடித்து விட்டு மீண்டும் ஷங்கர் பாலிவுட் செல்ல உள்ளார் என தெரிகிறது.

முன்னதாக கடந்த 2001ஆம் ஆண்டு ’முதல்வன்’ படத்தின் இந்தி ரீமேக் படத்தை ஷங்கர் இயக்கினார் என்பதும் அதன் பிறகு இருபது வருடங்கள் கழித்து மீண்டும் பாலிவுட் செல்ல உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos