close
Choose your channels

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Thursday, March 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் இளைஞர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்த அடுத்த படமான 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருந்த நிலையில் தற்போது இந்த படம் மார்ச் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் தற்போது சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங் ஆகியுள்ளது.

ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத், மாகபா ஆனந்த், பாலாசரவணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரஞ்சித் ஜெயகொடி இயக்கியுள்ளார். சாம் சி.எஸ் இசையில் கவின்ராஜ் ஒளிப்பதிவில், பவன்ஸ்ரீகுமார் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.