அஜித்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,January 30 2019]

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் இதுவரை இல்லாத வகையில் அஜித் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்து வருகிறது. மூன்று வாரம் முடிந்த பின்னரும் திரையரங்குகளில் இந்த படத்திற்கு இன்னும் குடும்ப ஆடியன்ஸ்கள் குவிந்து கொண்டிருப்பதே இந்த படத்தின் இமாலய வெற்றிக்கு சான்று

இந்த நிலையில் தமிழில் சூப்பர் ஹிட் ஆன் இந்த படம் கன்னடத்தில் டப் செய்து விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் கன்னட பதிப்பிற்கு 'ஜகமல்லா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 'விஸ்வாசம்' படத்தின் கன்னட டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.

மேலும் 'விஸ்வாசம்' தமிழ் திரைப்படம் ஏற்கனவே கர்நாடகாவில் வெளியாகி ஒரிஜினல் கன்னட படங்களின் வசூலை முறியடித்து சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சென்னை மாப்பிள்ளையை மணந்த மலையாள நடிகை

நடிகை திவ்யா உன்னியின்  சகோதரியும் மலையாள நடிகையுமான வித்யா உன்னிக்கு கடந்த ஞாயிறு அன்று கேரளாவில் உள்ள கொச்சியில் திருமணம் நடைபெற்றது.

விஜய்சேதுபதியின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் இரட்டையர்கள்

ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களில் நடித்து அதனை பெரும்பாலான வெற்றி படங்களாக கொடுத்து கொண்டிருக்கும் நடிகர் விஜய்சேதுபதிக்கு இந்த ஆண்டு பொற்காலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவ திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு

கடந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற அதிர்ச்சியான சம்பவங்களில் ஒன்று தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்.

நியூயார்க் கொலம்பியா பல்கலையில் காட்சிப்படுத்தப்படும் ரஞ்சித்தின் 2 படங்கள்

உலகின் முதல் தலித் திரைப்படவிழா அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் உலகெங்கிலும் இருந்து பல திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ள

விஜய்சேதுபதியின் அடுத்த பட நாயகி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

கடந்த ஆண்டு வெற்றிப்படங்களை குவித்த மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இந்த ஆண்டும் கடந்த ஆண்டை போலவே வெற்றி நாயகனாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது