close
Choose your channels

சென்னை மாப்பிள்ளையை மணந்த மலையாள நடிகை

Wednesday, January 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'பாளையத்து அம்மன்', 'வேதம்', 'ஆண்டான் அடிமை' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை திவ்யா உன்னியின் சகோதரியும் மலையாள நடிகையுமான வித்யா உன்னிக்கு கடந்த ஞாயிறு அன்று கேரளாவில் உள்ள கொச்சியில் திருமணம் நடைபெற்றது.

வித்யா உன்னிக்கும் சென்னையை பூர்வீகமாக கொண்ட சஞ்சய் வெங்கடேஸ்வரன் என்பவருக்கும் கொச்சியில் நடைபெற்ற இந்த திருமணத்தில் திவ்யா உன்னி தனது கணவருடன் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வித்யா உன்னி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகை வித்யா உன்னி 'டாக்டர் லவ்' மற்றும் 3ஜி தேர்டு ஜெனரேஷன்' ஆகிய இரண்டு மலையாள படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.