தனுஷின் அடுத்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர்!

  • IndiaGlitz, [Monday,September 02 2019]

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் புதிய திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படம் என்றும், ஐரோப்பிய கேங்ஸ்டர் மற்றும் இந்திய வம்சாவளி கேங்ஸ்டருக்கும் இடையே நடைபெறும் மோதல் தான் படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ அவர்கள் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். பென்ஹர்', 'டுமாரோ', 'எலிமினேட்டர்', 'வொண்டர் வுமன்' உள்பட பல திரைப்படங்களில் நடித்த ஜேம்ஸ் காஸ்மோ இந்த படத்தில் இணைந்திருப்பதை புகைப்படம் ஒன்றும் உறுதி செய்துள்ளது.

தனுஷின் 40வது படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிபிராஜ் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு!

சிபிராஜ் நடித்து வரும் 'ரங்கா' என்ற படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வினோத் இயக்கி வரும் இந்தப் படத்தில் சிபிராஜ் ஜோடியாக நிகிலா விமல் நடித்து வருகிறார்.

விஷ்ணுவிஷால் அடுத்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்!

கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'ராட்சசன்' மற்றும் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்

கவின், நீயும் லாஸ்லியாவும் வெளியே போங்கடா! சாண்டி ஆவேசம்

பிக்பாஸ் வீட்டில் இன்றைய ஓப்பன் நாமினேஷனில் சேரனையும் ஷெரினையும் கவின் நாமினேட் செய்தார் என்பது முதல் புரமோவில் இருந்து தெரிய வந்தது.

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் சாக்சி-அபிராமி!

பிக்பாஸ் வீட்டில் இருந்து பார்வையாளர்களால் வெளியேற்றப்பட்ட வனிதா மீண்டும் போட்டியாளராக மாறியிருப்பது, பார்வையாளர்களின் வாக்குகளுக்கு மதிப்பளிக்காமல் பிக்பாஸ் நிர்வாகம் நடந்து

மாறன் சகோதரர்களுடன் தளபதி விஜய் சந்திப்பு!

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான தளபதி 64' திரைப்படத்தின் படப்பிடிப்பு