ஸ்ரீதேவி மறைவுக்குக் பின் ஜான்வி கொண்டாடிய நெகிழ்ச்சியான பிறந்த நாள்

  • IndiaGlitz, [Wednesday,March 07 2018]

பிரபல நடிகையும் இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டாருமாகிய ஸ்ரீதேவியின் மறைவு மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஒரு செய்தியாக இருக்கலாம், ஆனால் அவருடைய குடும்பத்தினர்களுக்கு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு. குறிப்பாக அவருடைய இரண்டு மகள்களான ஜான்விகபூர், குஷிகபூர் ஆகியோர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகளே இல்லாமல் அவருடைய உறவினர்கள் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஜான்வி கபூர் தனது பிறந்த நாளை நெகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். தனது தாயை இழந்த ஜான்விகபூர், தனது தாயின் வயதில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்று அவர்கள் முன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அந்த இல்லத்தில் இருந்த முதியோர்களின் வாழ்த்துக்கள், தனது தாயின் வாழ்த்தாகவே அவர் கருதியதாக கூறப்படுகிறது.

மேலும் முதன்முதலாக ஸ்ரீதேவியின் மறைவிற்கு பின் அவருடைய புன்சிரிப்பை பார்க்க முடிந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். முதியோர் இல்லத்தில் ஜான்விகபூர் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

ராணுவம் வந்தாலும் பெரியாரை அகற்ற முடியாது: சத்யராஜ் ஆவேசம்

பெரியார் சிலை உடைப்பு குறித்து பாஜகவின் எச்.ராஜா நேற்று கூறிய கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தலைவர்கள், திரையுலகை சேர்ந்தவர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பெரியார் சிலை விவகாரம்: முழு பூசணிக்காயை மறைக்கும் எச்.ராஜா

நேற்று காலை பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூலில் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை போல் தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார்.

சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை? மன அழுத்தம் காரணமா?

அயனாபுரம் கே-2 காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த சதீஷ்குமார் என்பவர் இன்று காலை திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியார் சிலை உடைப்பு கருத்துக்கு கண்டனம் தெரிவித்த பிரபல நடிகர்

கோலிவுட் திரையுலகில் ஜல்லிக்கட்டில் தொடங்கி நெடுவாசல், நீட் உள்ளிட்ட அனைத்து சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்தவர்களில் ஒருவர் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் என்பது தெரிந்ததே.

கமல் உள்பட 138 பேர்களுக்கு நோட்டீஸ்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

கமல் கடந்த மாதம் அரசியல் கட்சியை தொடங்கி அந்த கட்சியை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியில் உள்ள நிலையில் கமல்ஹாசன் உள்பட 138 பேர்களுக்கு நோட்டீஸ் வழங்குமாறு ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.