close
Choose your channels

பெரியார் சிலை உடைப்பு கருத்துக்கு கண்டனம் தெரிவித்த பிரபல நடிகர்

Wednesday, March 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெரியார் சிலை உடைப்பு கருத்துக்கு கண்டனம் தெரிவித்த பிரபல நடிகர்

கோலிவுட் திரையுலகில் ஜல்லிக்கட்டில் தொடங்கி நெடுவாசல், நீட் உள்ளிட்ட அனைத்து சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்தவர்களில் ஒருவர் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதையும் பதட்டமடைய செய்த எச்.ராஜாவின் பெரியார் சிலை குறித்த கருத்துக்கு கோலிவுட் திரையுலகின் பெரிய நட்சத்திரங்கள் யாரும் கருத்து சொல்லவில்லை. இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

பெண்ணடிமையை, சாதியை, மூட நம்பிக்கைகளை உடைத்த இரும்பு மனிதர் பெரியார்.! அவரின் சிலைகள் அப்புறப்படுத்தபடும் என்று சொன்னது வன்மையான கண்டனத்துக்குரியது..! என்று கூறியுள்ளார். ஜிவி பிரகாஷின் இந்த தைரியமான பதிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.