ஜெயலலிதா சிகிச்சை விபரங்களை வெளியிட மத்திய, மாநில அரசு உத்தரவா? சசிகலா தரப்பு அதிர்ச்சி

  • IndiaGlitz, [Monday,December 19 2016]

தமிழக முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதாவின் மரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பொதுமக்களும், பல அரசியல் கட்சி தலைவர்களும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் இதற்கு பதில் சொல்ல வேண்டிய அப்பல்லோ நிர்வாகமும், சசிகலா தரப்பும் தொடர்ந்து மவுனம் காத்து வருகின்றன.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் எம்பி சசிகலா புஷ்பா ஆகியோர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து பரபரப்புடன் கேள்விக்கணைகளை எழுப்பி வருகின்றனர்.


இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை குறித்த முழு விவரத்தையும் வெளியிட வேண்டும் என முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சார்பில் அப்பல்லோ மருத்துவமனைக்கு உத்தரவு போயுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து இந்த உத்தரவு போனாலும் இதன் பின்னணியில் மத்திய அரசு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த உத்தரவால் சசிகலா தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், இந்த உத்தரவை சரிக்கட்ட ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஜெயலலிதா சிகிச்சைகள் குறித்து அப்பல்லோ தகவல்கள் வெளியே வந்தால் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரளயமே ஏற்படும் என்று ஹேக்கர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்ட நிலையில் மத்திய, மாநில அரசுகளின் இந்த உத்தரவை ஏற்று அப்பல்லோ ஜெயலலிதா சிகிச்சை ரகசியங்களை வெளியிடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் படத்தில் வடிவேலு

இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள 61வது படமான 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி...

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'மன்னன்' ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்?

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த 'சிவலிங்கா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து...

அழகிய சூடான பூவே: பைரவா' படத்தின் முதல் பாடல்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும்...

செல்வராகவன் - சந்தானம் படத்தின் நாயகி

நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக புரமோஷன் ஆகியுள்ள சந்தானம், பிரபல இயக்குனர் செல்வராகவன்...

ஆஸ்கார் கிடைக்கவில்லை என்றாலும் அனுபவம் கிடைத்தது. வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த 'விசாரணை' திரைப்படம் தேசிய விருதுகளை அள்ளியது...