close
Choose your channels

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் படத்தில் வடிவேலு

Monday, December 19, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள 61வது படமான 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. காஜல் அகர்வாலும் இந்த தகவலை கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டுள்ளார். அதேபோல் 'காவலன்' படத்திற்கு பின்னர் மீண்டும் விஜய்யுடன் இணைந்து வடிவேலு நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த படத்தின் எடிட்டர் ரூபன் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக விஷ்ணு என்பவர் அறிமுகமாகிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் அவர்களிடம் உதவியாளராக இருந்தாவர் என்பது குறிப்பிடத்தக்கது. 'தெறி' வெற்றிக்கு பின்னர் அட்லி இயக்கவுள்ள இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.