close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'மன்னன்' ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்?

Monday, December 19, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த 'சிவலிங்கா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. பி.வாசு இயக்கிய இந்த படத்தின் பாடல்கள் வரும் ஜனவரியில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை அடுத்து பி.வாசு, அவர் இயக்கிய 'மன்னன்' படத்தை ரீமேக் செய்வார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜயசாந்தி, குஷ்பு, நடித்த இந்த மாபெரும் சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ், ரஜினி கேரக்டரில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 'மன்னன்' படத்தில் நடித்த கவுண்டமணி வேடத்தில் வடிவேலு நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விஜயசாந்தி, குஷ்பு வேடத்தில் நடிக்க பிரபல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு 'சிவலிங்கா' படத்தின் ரிலீசுக்கு பின்னர் தொடங்கும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.