close
Choose your channels

அழகிய சூடான பூவே: பைரவா' படத்தின் முதல் பாடல்

Monday, December 19, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் வரும் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மேலும் இந்த படத்தின் பாடல்கள் உரிமையை பெற்றுள்ள லஹரி நிறுவனம் இன்று முதல் தினமும் ஒரு பாடலின் ஆரம்ப வரிகளை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி இன்று முதல்பாடலின் ஆரம்ப வரி 'அழகிய சூடான பூவே' என்று வெளியிட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் கவியரசர் வைரமுத்து எழுதிய இந்த பாடலை விஜய்நரேன் மற்றும் தர்ஷனா பாடியுள்ளனர். இதேபோல் இன்னும் மூன்று நாட்களில் மூன்று பாடல்களின் வரிகளை இந்நிறுவனம் வெளியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.