close
Choose your channels

பறக்கும் பணம், தங்கம், இரும்புச் சங்கிலி.. பார்க்கவே வித்தியாசமாக இருக்கும் ஜெயம் ரவியின் 'ஜெனி' ஃபர்ஸ்ட்லுக்..!

Sunday, March 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடித்து வரும் ‘ஜெனி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இரும்பு சங்கிலியால் ஜெயம் ரவி கட்டி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த சங்கிலி தூள் தூளாக நொறுங்குவது போன்றும் அந்த சங்கிலியிலிருந்து பணம் தங்கம் உள்பட பல பொருட்கள் மிதந்து வரும் வகையில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து இந்த படம் ஒரு அட்டகாசமான பேண்டஸி மற்றும் மேஜிக்கல் படம் என்பது தெரிய வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்து விடும் என்றும் விரைவில் ரிலீஸ் தேதி உட்பட இந்த படத்தின் முக்கிய தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஜெயம் ரவி நடிப்பில், மிஷ்கினிடம் உதவியாளராக இருந்த அர்ஜூனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’ஜெனி’ படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், மற்றும் வாமிகா ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர். இசை புயல் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.