ஆசிரியராகும் கனவு… 1,200 கி.மீ தூரத்தை மொபட்டில் கடந்துவந்த கர்ப்பிணி பெண்!!! நெகிழ்ச்சி சம்பவம்!!!

  • IndiaGlitz, [Saturday,September 05 2020]

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது மனைவியை, தேர்வு எழுதுவதற்காக 1,200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு மொபட்டிலேயே அழைத்து வந்து இருக்கிறார். அதுவும் 4 மாநில எல்லைகளைக் கடந்து கர்ப்பிணிப் பெண்ணை மொபட்டில் வைத்து அழைத்து வந்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பருவமழை வலுவடைந்து இருக்கும் இந்நேரத்தில் இத்தனை ஆபத்தான பயணத்தை தம்பதி இருவரும் எதற்காக தேர்ந்தெடுத்தனர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தனஞ்செயன் (27) என்ற இளைஞர் ஹெம்ப்ராம் என்ற பழங்குடியினப் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். ஹெம்ப்ராம் ஆசிரியர் பயிற்சிக்கான கல்வியைப் படித்து வருகிறார். இந்நிலையில் அப்பயிற்சி வகுப்புக்கான இறுதித்தேர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தேர்வு மையம் மகாராஷ்டரா மாநிலத்தில் உள்ள குவாலியர் எனத் தெரிந்தும் ஹெம்பப்ராம் அதிர்ந்து போயிருக்கிறார். கொரோனா காலத்தில் ரயில், பேருந்து போன்ற வசதிகள் எதுவும் இல்லாமல் இத்தம்பதியினர் தவித்து வந்துள்ளனர். 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே பயின்றுள்ள தனஞ்செயன் தனது மனைவியின் லட்சியத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என முடிவெடுத்து அதற்குரிய வழியைத் தேடியிருக்கிறார்.

முதலில் கார் பயணம் மேற்கொள்ள விசாரித்து இருக்கின்றனர். 30 ஆயிரம் வரை செலவாகும் எனக்கூறப்பட்ட நிலையில் அத்திட்டத்தை கைவிட்டு இருக்கின்றனர். பின்னர் தன்னிடம் இருந்த நகை ஒன்றை அடகு வைத்து ரூ.10 ஆயிரம் திரட்டிய்தோடு தனது சொந்த மொபட்டை எடுத்துக் கொண்டு பயணம் செய்ய ஆரம்பித்து இருக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள குவாலியருக்கு 1,200 கிலோ மீட்டர் தூரத்தை மொபட்டிலேயே கடந்து வந்துள்ளனர். வழியில் நிறைய இடங்களில் மழை பெய்திருக்கிறது. அதையும் பொருட்படுத்தாமல் இறுதியில் குவாலியரை அடைந்துள்ளனர். தற்போது குவாலியருக்கு வந்த நிலையில் தங்கும் அறை, போக்குவரத்து செலவு எல்லாமும் சேர்த்து இதுவரை 5 ஆயிரம் ரூபாய் செலவானதாகவும் தம்பதிகள் தெரிவித்து உள்ளனர்.

தற்போது தனஞ்செயன்-ஹெம்ப்ராம் தம்பதியினர் பயணம் செய்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. இச்சம்பவத்தை கேள்விப்பட்ட குவாலியர் மாவட்ட நிர்வாகம் தம்பதியினருக்கு தேவையான உதவிகளை செய்ய முன்வந்துள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பாக அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நன்கொடை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. தனது லட்சியத்தை அடைய எதையும் பொருட்படுத்தாமல் 1,200 கி.மீ பயணம் செய்துவந்த கர்ப்பிணிக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.

More News

சூரரை போற்று' படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்!

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்னரே முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் 30ஆம் தேதி

கேப்டன் யார் என்பதை காலம் முடிவு செய்யும்: ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அரசியல் பெண் பிரமுகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் நவம்பர் மாதம் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி அரசியல் களத்தில் குதிக்கவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசியூவில் கேக் வெட்டிய எஸ்பிபி: குடும்பத்தினர், டாக்டர்கள் மகிழ்ச்சி

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்

'தனுஷ் 43' படம் குறித்து சூப்பர் அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்!

தனுஷின்'அசுரன்' மற்றும் 'பட்டாஸ்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர்ஹிட்டாகிய நிலையில் தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய'ஜெகமே தந்திரம்' மற்றும் மாரி செல்வராஜ் இயக்கிய 'கர்ணன்

ஆசிரியர் கேரக்டர்களில் அசத்திய தமிழ் திரையுலக பிரபலங்கள்!

இன்று நாடு முழுவதும் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் ஆசிரியர் கேரக்டர்களில் நடித்தது குறித்து தற்போது பார்ப்போம்