close
Choose your channels

விஜய்சேதுபதியின் அடுத்த படம் ஓடிடியில் நேரடி ரிலீஸ்.. தேதியை அறிவித்த ஜியோ சினிமா..!

Friday, May 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களாக நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்பதும் ஒரு கட்டத்தில் நேரடியாக எந்த திரைப்படமும் ரிலீஸ் ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது ஐபிஎல் போட்டிகளை இலவசமாக ஒளிபரப்பாகி வரும் ஜியோ சினிமா தமிழ் உள்பட ஒருசில மொழி திரைப்படங்களை ஓடிடியில் நேரடியாக வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

ஏற்கனவே விஷ்ணு விஷாலின் ’மோகன்தாஸ்’ உள்பட ஒரு சில திரைப்படங்களை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஜியோ சினிமா அறிவித்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடித்த ஹிந்தி திரைப்படமான ’மும்பைகார்’ என்ற படத்தை நேரடியாக ஜியோ சினிமா ஓடிடியில் ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 2ஆம் தேதி இந்த படம் நேரடியாக ரிலீஸ் செய்யப்படும் என்று கூறியதோடு இந்த படத்தின் டீசரையும் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி, விக்ராந்த் மாஸ்ஸே உள்பட பலர் நடிப்பில் உருவாகும் இந்த படத்தை சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ’மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.