அனைவருக்குமான அதிபராக இருப்பேன்: வெற்றி பெற்ற ஜோபைடன் உரை!

  • IndiaGlitz, [Sunday,November 08 2020]

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற்ற நிலையில் கடந்த சில நாட்களாக வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில் ஆரம்பத்திலிருந்தே முன்னணியில் இருந்த ஜோபைடன் வெற்றி பெற்றதாக நேற்று இரவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு 284 வாக்குகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270 வாக்குகள் போதும் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல் துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் அவர்களும் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து ஜோபைடன், கமலா ஹாரீஸ் ஆகிய இருவரும் வரும் ஜனவரி மாதம் பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் வெற்றிக்குப் பின்னர் நாட்டு மக்களிடம் உரையாடிய ஜோ பைடன் ’டிரம்புக்கு வாக்களித்தவர்களும் அமெரிக்க மக்கள் என்பதால் அனைவருக்குமான அதிபராக நான் இருப்பேன் என்றும் நீலம் சிகப்பு மாகாணங்கள் என்ற பிரிவினை இருக்காது என்றும் தெரிவித்தார். மேலும் அமெரிக்க மக்கள் இந்தத் தேர்தலில் ஒரு தெளிவான முடிவை எடுத்து உள்ளார்கள் என்றும், இந்த கொரோனா காலத்தில் பெருந்திரளாக வந்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி என்றும் அவர் கூறினார்

அதேபோல் வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ் நாட்டு மக்களிடம் கூறியபோது ’அமெரிக்க தேர்தல் மூலம் ஒரு பெண் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்துள்ளோம் என்றும், 50 ஆண்டுகளுக்கு முன்னர் வாக்களிக்கும் உரிமையைப் பெற்ற பெண்கள் தற்போது ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்துள்ளனர் என்றும் முன்னாள் அதிபர் ஒபாமா வழியில் அமெரிக்காவின் நலனுக்காக செயல்படுவேன்’ என்றும் கூறியுள்ளார்

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியடைந்த ஜோபைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

More News

சம்யுக்தா மேல செம காண்டா இருக்கோம்: சோம் நண்பர்கள் பேட்டி 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் சோம், ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாலும் கடந்த சில நாட்களாக தனது விளையாட்டை ஆரம்பித்து உள்ளார் என்பது தெரிந்ததே

கொரோனாவுக்கு பின் கடற்கரையில் நயன்தாரா: வைரலாகும் புகைப்படங்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் மத்திய மாநில அரசுகள் கொடுத்த அனுமதியின் அடிப்படையில்

சுசித்ராவை வறுத்தெடுத்த கமல்: பார்வையாளர்களுக்கு செம விருந்து!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று என்னென்ன நடக்க போகிறது என்பதை புரமோ வீடியோக்கள் மூலமும், நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த செய்திகளின் மூலமும் பார்த்தோம்.

சம்யுக்தாவை கேப்டனாக்கி அரசியல் ஆதாயம்: கமல் குற்றச்சாட்டால் பாலாஜி அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுவதும் பாலாஜி விளையாடிய விதம், அதுவரை அவர் மீது வைத்திருந்த மரியாதையை குறைத்துவிட்டது என்றே சொல்லலாம்.

ஃபிளைட்டுக்கு நேரமாச்சு: விஜய்-எஸ்.ஏ.சி அரசியல் விவகாரம் குறித்து வானதி ஸ்ரீனிவாசன்!

தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் திடீரென விஜய்யின் பெயரில் அரசியல் கட்சி தொடங்கியதும், அதன் பின்னர் அவசரம் அவசரமாக அதனை விஜய் மறுப்பு தெரிவித்ததும்,