close
Choose your channels

சுசித்ராவை வறுத்தெடுத்த கமல்: பார்வையாளர்களுக்கு செம விருந்து!

Saturday, November 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று என்னென்ன நடக்க போகிறது என்பதை புரமோ வீடியோக்கள் மூலமும், நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த செய்திகளின் மூலமும் பார்த்தோம். இன்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் பிறந்த நாள் கொண்டாட்டம், கமல்ஹாசனுக்கு நாகார்ஜூனாவும் தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் வாழ்த்து கூறும் காட்சி, அதன்பின்னர் பாலாஜியின் கேப்டன்ஷிப் விட்டு கொடுத்த தந்திரம், சம்யுக்தாவின் புலம்பல் ஆகியவை இடம் பெறுகின்றன.

இந்த நிலையில் நாளை தான் பார்வையாளர்கள் எதிர்பார்த்த முக்கிய காட்சிகள் வருகிறது. குறிப்பாக நீதிமன்றத்தை காமெடி மன்றமாமாக்கி, நீதிபதி என்றால் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாய் இருந்த சுசித்ராவை, கமல்ஹாசன் வறுத்தெடுக்கும் காட்சிகள் உள்ளது. எந்த உலகத்தில் பார்வையாளர்களை கையை தூக்க சொல்லி ஜட்ஜ்மெண்ட் கொடுக்கும் வழக்கம் இருக்கின்றது என்பதை சுசி இனிமேலாவது உணர்ந்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

மேலும் இன்றும் நாளையும் அர்ச்சனா, ஆரி, பாலாஜி, அனிதா, சனம், சோம் ஆகியோர் காப்பாற்றப்பட்டு நாளை சுரேஷ் வெளியேற்றப்படுகிறார். முதல் பத்து நாட்கள் அட்டகாசமாக விளையாடி அனைவர் மனதிலும் ஹீரோவாக தெரிந்த சுரேஷ், திடீரென பெட்டிப்பாம்பாய் அடங்கியதற்கான விலையை அவர் கொடுத்திருக்கின்றார் என்பதும் இது மற்ற போட்டியாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.