close
Choose your channels

மூத்த பத்திரிகையாளர் மேஜர்தாசன் காலமானார்: பத்திரிகையாளர்கள் சங்கம் இரங்கல்

Sunday, July 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரையுலக மூத்த பத்திரிகையாளர் மேஜர்தாசன் அவர்கள் சற்றுமுன் காலமானார். அவருடைய மறைவு பத்திரிகையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது. பத்திரிகையாளர் மேஜர்தாசன் மறைவு குறித்து தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது

தமிழ் சினிமாவின் மூத்த செய்தியாளர், பி.ஆர்.ஓ. திரு.மேஜர்தாசன் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தாம்பரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தார். இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ் திரையுலகில் தனக்கென தனி அடையாளம் வைத்து பயணப்பட்டவர். மூத்த கலைஞர்களின் நெருங்கிய நண்பராக இருந்தவர். அன்பாக பழகக்கூடியவரின் இந்த திடீர் மறைவு தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பு.

அவரை இழந்து வாடும் குடும்பத்தாரின், நண்பர்களின் துயரத்தில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் தன்னையும் இணைத்து கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.