close
Choose your channels

விஜய்சேதுபதியின் 'ஜூங்கா' டிராக் லிஸ்ட் வெளியீடு

Saturday, June 9, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதியின் ஜூங்கா டிராக் லிஸ்ட் வெளியீடு

விஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள 'ஜூங்கா' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் வரும் 13ஆம் தேதி வெளீயாகும் என்று படக்குழுவினர் அறிவித்ததை நேற்று பார்த்தோம்

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிராக்லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்காக இசையமைப்பாளர் சித்தார்த் விபின் ஆறு பாடல்களை கம்போஸ் செய்துள்ளார். ஆறு பாடல்களையும் லலித் ஆனந்த் எழுதியுள்ளார்.

1. 'அம்மா மேல சத்தியம்' என்று தொடங்கும் பாடலை ஜெகதீஷ், பவிதா கோகுல் ஆகியோர் பாடியுள்ளனர்.

2. 'ரைஸ் ஆஃப் டான்' என்று தொடங்கும் இந்த பாடலை சுராஜ் ஜெகன், சித்தார்த் விபின், ஜீடிவி புகழ் ரமணி அம்மாள், ஆகியோர்களுடன் ராப் பகுதிகளை எமீஸ் ஜெஸ் பாடியுள்ளார்.

3. 'பாரீஸ் டு பாரீஸ்' என்ற இந்த பாடலை அந்தோணி தாசன், கல்பனா ஆகியோர் பாடியுள்ளனர்.

4. 'லோலிக்கிரியா' என்று தொடங்கும் இந்த பாடலை மரணகானா விஜி, நாகேஷ் அஜிஸ் ஆகியோர் பாடியுள்ளனர்.

5. 'கூட்டிப்போ கூடவே' என்று தொடங்கும் இந்த பாடலை சத்யபிரகாஷ், ரனினா ரெட்டி ஆகியோர் பாடியுள்ளனர்.

6. 'மக்கள் செல்வன்' என்று தொடங்கும் பாடலை சுராஜ் ஜெகன் மற்றும் ஜெகதீஷ் பாடியுள்ளனர்.

இந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்ததா? என்பதை வரும் 13ஆம் தேதி பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.