close
Choose your channels

ரூ.2 கோடிக்கு விலை போக தயாராகும் 'காலா' நாய்

Friday, June 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரூ.2 கோடிக்கு விலை போக தயாராகும் காலா நாய்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் நேற்று வெளியாகி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. இணையதளங்கள், விமர்சகர்கள், சமூக இணையதளங்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளதால் இந்த படத்தின் முதல் நாள் வசூல் சாதனை செய்துள்ளது

இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினியுடன் நடித்த நாய் ஒன்றுக்கு தற்போது ரூ.2 கோடி வரை விலை பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 'காலா' படத்தில் ரஜினியுடன் நடிக்கும் நாய் என்று கேள்விப்பட்டவுடன் இந்த நாயை வாங்க பலர் போட்டி போட்டதாகவும், ரூ.30 ஆயிரம் முதல் தொடங்கிய இந்த நாயின் மதிப்பு தற்போது ரூ.2 கோடி வரை இருப்பதாகவும் இந்த நாயை வளர்த்து வரும் சைமன் என்பவர் கூறியுள்ளார். இந்த நாயின் மீது ரஜினிகாந்த் மிகுந்த பாசம் வைத்திருந்தார் என்றும், நாயுடன் நடிக்கும் காட்சி இருக்கும் நாளில் அவர் தவறாமல் தனது 'மணி'க்கு பிஸ்கட் வாங்கி கொண்டு வருவார் என்றும் சைமன் மேலும் கூறியுள்ளார்.

ரூ.2 கோடி வரை 'மணி' என்ற இந்த நாயை விலைக்கு ஒருசிலர் கேட்டாலும், தான் விற்க தயாராக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தெருநாய் போன்று சாதாரண தோற்றத்தில் உள்ள நாய், 'காலா' படத்தில் நடித்ததால் கோடிக்கணக்கான ரூபாய்க்கு மதிப்பு மிகுந்ததாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.