close
Choose your channels

அம்மாவாக டிரெயினிங்: காஜல் அகர்வாலின் வேற லெவல் புகைப்படங்கள்!

Thursday, February 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை காஜல் அகர்வால் பதிவு செய்த வேற லெவல் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கும் மும்பை தொழிலதிபர் கவுதமுக்கும் 2020ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் தற்போது காஜல் அகர்வால் கர்ப்பமாக உள்ளார். காஜல் அகர்வால் - கௌதம் தம்பதியினர் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் தாய்மை அடைவது குறித்தும், தாய்மையின் பெருமை குறித்தும் காஜல் அகர்வால் நீண்ட பதிவு செய்திருந்தார் என்பதும் அந்த பதிவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் காஜல் அகர்வால் தற்போது அம்மாவாக டிரெய்னிங் எடுத்து வருவதாகவும் கர்ப்பமாக இருக்கும் நேரம் உங்களுக்கு தெரியாத பலங்களை கற்றுக் கொள்ளும் நேரம் என்றும், நீங்கள் அறியாத பயங்களை கையாளும் நேரமும் இதுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கவிதை வடிவம் காஜல் அகர்வால் செய்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் அகர்வால் நடித்த ’ஹேய் சினாமிகா’ என்ற திரைப்படம் வரும் மார்ச் 3ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.