close
Choose your channels

கலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த படைப்பு: முக்கிய வேடங்களில் இரு பிரபலங்கள்!

Thursday, December 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி எஸ் தாணு அவர்களின் அடுத்த படைப்பில் இரண்டு பிரபலங்கள் நடித்து இருப்பதாகவும் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் மதிமாறன் என்பவரது இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’செல்பி’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 4.40 மணிக்கு வெளியாகும் என கலைப்புலி எஸ் தாணு அவர்கள் சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் இரண்டாவது லுக் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் ஆகிய இரண்டு பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் வர்ஷா பொம்மலாமா நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணு ரெங்கசாமி ஒளிப்பதிவில், இளையராஜா படத்தொகுப்பில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிவரும் இந்த படம் கலைப்புலி எஸ் தாணுவின் மேலும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.