close
Choose your channels

ஓவியாவுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் விருந்து: புதிய தகவல்

Saturday, July 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை கடந்த இரண்டு நாட்களாகவே வில்லி போல் காண்பித்து அவரது இமேஜை டேமேஜ் செய்வதாக காட்சிகள் அமைந்துள்ளது. ஆனால் கமல்ஹாசன் இன்றைய புரமோ வீடியோவில் 'நமக்கு வேண்டியவர்களும் இல்லை, வேண்டாதவர்களும் இல்லை' என்று கூறியதால் இன்றைய நிகழ்ச்சியில் நடுநிலை மற்றும் சுவாரஸ்யம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்றைய கமல்ஹாசனின் நிகழ்ச்சியை படம் பிடித்த தொழில்நுட்ப கலைஞர்களிடம் இருந்த கசிந்த தகவலின்படி இன்று ஓவியாவுக்கு செம சர்ப்ரைஸ் பரிசு ஒன்று கிடைக்கவிருப்பதாகவும், கடந்த சில நாட்களாக மனமுடைந்து இருந்த ஓவியா இன்று கிடைத்த விருந்தால் அவர் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த செய்தி கசிந்தவுடன் ஓவியா ஆர்மி, ஓவியா புரட்சி படையினர் உற்சாகமாக உள்ளனர். சமூக வலைத்தளங்களில் வழக்கத்தை விட ஓவியாவுக்கு இன்று ஆதரவு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.