close
Choose your channels

சிறப்பு தோற்றத்தில் கமல், ஜீவா நடிக்கும் படம்.. ஹீரோ யார் தெரியுமா?

Tuesday, January 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் நடித்து வரும் திரைப்படத்தில் கமலஹாசன் மற்றும் ஜீவா ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் ’ஜல்லிக்கட்டு’ இயக்குனர் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மலைக்கோட்டை வாலிபன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ராஜஸ்தான் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் மற்றும் ஜீவா ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் அவர்களது காட்சிகள் விரைவில் படமாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே மோகன்லால் மற்றும் கமல்ஹாசன் இணைந்து ’உன்னை போல் ஒருவன்’ என்ற படத்தில் நடித்துள்ளனர். அதேபோல் மோகன்லால் விஜய்யுடன் நடித்த ’ஜில்லா’ திரைப்படத்தில் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.