close
Choose your channels

வணக்கம் இந்தியா.. 'இந்தியன் இஸ் பேக்': ரஜினி வெளியிட்ட 'இந்தியன் 2' வீடியோ..!

Friday, November 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் ஸ்பெஷல் வீடியோவை சற்று முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சுமார் 2 நிமிடங்கள் உள்ள இந்த வீடியோவில் உலகநாயகன் கமல்ஹாசனின் அட்டகாசமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கெட்டப் மற்றும் அசரவைக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளன.

‘இந்தியன்’ முதல் பாகத்தை படத்தைப் போலவே இந்த படத்திலும் லஞ்சம் மற்றும் தான் ஊழலை தான் ஷங்கர் கையில் எடுத்துள்ளார் என்பது இந்த வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. அனிருத் அட்டகாசமான பின்னணி இசை படத்தின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. மொத்தத்தில் ’இந்தியன் 2’ படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.