close
Choose your channels

கமல் பிறந்த நாளில் ஆக்சன் விருந்து: 'விக்ரம்' டீசர்

Saturday, November 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் நாளை தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் நிலையில் அவர் நடித்துள்ள ‘விக்ரம்’ படத்தின் டீசர் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் ‘விக்ரம்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரில் கைதிகள் இருவர் தப்பித்துச் செல்வது போன்றும், சிறையில் அதிரடியாக துப்பாக்கி சண்டை நடப்பது போன்ற காட்சிகள் உள்ளன. டீசரின் கடைசி காட்சிகளில் கமலஹாசன் அவர்களின் அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டீசரை பார்க்கும்போது படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும், குறிப்பாக அனிருத்தின் பின்னணி இசை கலக்கலாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.