close
Choose your channels

காபிக்கு போராடுனீங்க, டீமுக்கு ஏன் போராடல: வனிதாவுக்கு கமல் போடும் குறும்படம்!

Sunday, February 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காபிக்கு போராடின நீங்க டீமுக்கு ஏன் போராடவில்லை என்று கேள்வி எழுப்பி வனிதாவுக்காக குறும்படம் போடுகிறேன் என கமல்ஹாசன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும், இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் போலீஸ் - திருடன் என்ற டாஸ்க் வைக்கப்பட்ட நிலையில் இந்த டாஸ்க்கில் இரு தரப்புமே சரியாக விளையாடவில்லை என்று ரசிகர்கள் மத்தியில் கருத்துக்கள் எழுந்து வந்ததும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் வெளியான புரமோவில் கமல்ஹாசன், ஒரு திருடன் எப்படி திருடுவான்’ என கேள்வி கேட்க அதற்கு அபினய், ‘மற்றவர் பொருள் மேல ஆசைப்பட்டு தெரியாமல் எடுத்துட்டு போவதுதான் திருட்டு என்று கூறுகிறார். அதனை அடுத்து போலீஸ் என்றால் என்ன? என்ற கேள்வியை கமல் கேட்டபோது, வனிதா, ‘ போலீஸ்காரர்கள் என்றால் நேர்மையாக இருக்கவேண்டும், நாணயமாக இருக்கவேண்டும், அவங்க திருடனாக மாறக்கூடாது’ என்று கூறினார்.

இதனை அடுத்து கமல்ஹாசன், ‘இவ்வளவு தெளிவாக இருக்கும் நீங்கள் விளையாட்டை மட்டும் ஏன் சரியாக விளையாடவில்லை? நீங்கள் விளையாட்டை விளையாட வேண்டாம் என்று நினைத்து விட்டீர்களா? அல்லது விளையாட்டு புரியவில்லையா என்று கேட்டார்.

அப்போது வனிதா, டீம் வொர்க் இல்லை என்று கூற, ‘ஏன் டீம் ஒர்க் இல்லை’ என கேள்வி எழுப்பிய கமல்ஹாசன், ‘காபிக்காக போராடிய நீங்கள் டீமுக்கு ஏன் போராடவில்லை என்று கேள்வி எழுப்பியதோடு, ஒரு குறும்படம் போடுகிறேன்’ என்று கூறினார். அப்போது அனைவரும் கைதட்ட, ‘இந்த குறும்படம் ஒருவருக்காக தயார் பண்ணிய போது அது குடும்ப படமாகி விட்டது என்றும் இந்த குறும்படத்தில் அனைவருமே சம்பந்தப்பட்டு இருக்கின்றீர்கள் என்றும் கூறியுள்ளார். அந்த குறும் படம் எப்படி இருக்கும் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.