close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நிரந்தரமாக விலகுகிறாரா கமல்ஹாசன்? அதிர்ச்சி காரணம்!

Thursday, December 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 6 ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வரும் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து நிரந்தரமாக விலக இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுவரை ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலேயே சீசன் 6 நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங் மிகவும் குறைவாக இருப்பதாகவும் போட்டியாளர்களின் தேர்வு மற்றும் போட்டியாளர்களின் விளையாடும் திறன் குறைவாக இருப்பதால் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரிதாக பேசப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

கமலஹாசன் என்னதான் சனி, ஞாயிறு நிகழ்ச்சிகளை சுவராசியமாக கொண்டு போனாலும் திங்கள் முதல் வெள்ளி வரையிலான நிகழ்ச்சியை தற்போது தொடர்ந்து யாரும் பார்ப்பதில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் மட்டுமன்றி இனிவரும் சீசன்களில் இருந்தும் விலகிக் கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி ’விக்ரம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் கமல்ஹாசனுக்கு வரிசையாக பல படங்கள் இருப்பதால் அதில் அவர் முழு கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக அவர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம், பா ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ’விக்ரம் 3’ மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகும் படம் என வரிசையாக அவருக்காக இயக்குனர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் அவர் தனது சினிமா படப்பிடிப்பில் முழு கவனத்தை செலுத்தி திட்டமிட்டு உள்ளதாகவும் அதனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நிரந்தரமாக விலகவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகினால் அவருக்கு இணையாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.