கொன்று பார், வென்று தீர்வேன்: குத்திக்கிழிக்கும் வீடியோ குறித்து கமல்

  • IndiaGlitz, [Wednesday,November 15 2017]

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'இந்து தீவிரவாதிகள் இனி இல்லை என்று சொல்ல முடியாது' என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு நாடு முழுவதும் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அவர் கூறிய கருத்து உண்மைதானோ? என்று சந்தேகம்ப்படும் அளவிற்கு நேற்று ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியானது. அந்த வீடியோவில் ஒரு சிறுவன் கமல்ஹாசனின் போஸ்டரை கத்தியால் குத்தி கிழிப்பதாக உள்ளது. பின்னணியில் ஒரு குரல் 'இவன் இந்து தீவிரவாதி, இவனை விடாதே' என்று ஒலிக்கின்றது.

இந்த வீடியோ குறித்து கமல் தனது டுவிட்டரில் கூறுகையில், ''என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல்.' 'என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ் இனம் சகியாது. இயற்கை எனைக் கொன்றே மகிழும். அதன்முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்' என்று பதிவு செய்துள்ளார்

இந்த டுவீட் புரியாதவர்களுக்கு இதோ ஒரு விளக்கவுரை: அங்கு வளர்ந்த மீனவ சகோதரர்கள் தமிழ் பேசியதற்காக சாகிறார்கள்..ஒரு குழந்தை குத்தி நான் சாவது மேல்தான்..ஒரு நாள் இயற்கையாக நான் சாகத்தான் போகிறேன்..அதற்குமுன் இந்த வாழ்க்கையை வாழ்ந்து மகிழ்வேன்..முடிந்தால் கொன்று பார்..நான் வென்றே தீர்வேன்

ஒரே டுவிட்டில் மத தீவிரவாதம் குறித்தும், மீனவர்கள் தமிழ் பேசியதால் தாக்கப்பட்டது குறித்தும் சுட்டிக்காட்ட கமல்ஹாசனால் மட்டுமே முடியும் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

கேரள அரசின் துணிச்சலான நடவடிக்கைக்கு கமல் பாராட்டு

பிறப்பு சான்றிதழில் சாதி பெயரை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று சமீபத்தில் கேரள அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்து அதனை சுற்றறிக்கையாக வெளியிட்டிருந்தது.

பசிக்கு மதமில்லை, விவசாயிகள் ஒன்றுகூட கமல் அழைப்பு

கமல்ஹாசனின் அரசியல் பாதை வித்தியாசமானது என்பதை அவரது நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு தெரியவரும். குறிப்பாக விவசாயிகள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் கமல்ஹாசன்.

குழந்தைகளுடன் குழந்தைகள் தின விழாவை கொண்டாடிய பிக்பாஸ் பிரபலம்

இன்று நவம்பர் 14 குழந்தைகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் தான் ஒரு நாட்டின் எதிர்கால தூண்கள் என்பதால் அவர்களை பிரபலங்களும் போற்றியும் ஆசிர்வத்தும் வருகின்றனர்.

41 நாட்களில் படப்பிடிப்பு முடிந்த கவுதம்மேனனின் அடுத்த படம்

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் தற்போது விக்ரம் நடிப்பில் 'துருவ நட்சத்திரம் என்ற படத்தையும், தனுஷ் நடிப்பில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தையும் இயக்கி வருகிறார்.

ரஜினி, கமலுக்கு ஆந்திர அரசு அளித்த கெளரவம்

ஆந்திர மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் என்டிஆர், பிஎன் ரெட்டி, நாகிரெட்டி - சக்ரபாணி, ரகுபதி வெங்கய்யா ஆகியோர் பெயர்களில் திரையுலக கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறது.