close
Choose your channels

இன்னும் காலம் ஆகாதவர்: சிவாஜி கணேசன் குறித்து கமல்ஹாசன்!

Friday, October 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரது நினைவுகளை திரையுலகினர் பலர் பகிர்ந்து வருகின்றனர் என்பதும் சற்று முன்னர் நடிகை குஷ்பு, சிவாஜி கணேசன் குறித்த டுவிட் ஒன்றை பதிவு செய்து இருந்தார் என்பதையும் பார்த்தோம்

மேலும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்திற்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு திரையுலக பிரபலங்கள் சிவாஜி கணேசனின் பிறந்த நாளில் அவரது புகழை போற்றி பதிவு செய்து வருகின்றனர். கூகுள் நிறுவனம் தனது பங்கிற்கு சிவாஜி கணேசனின் புகைப்படத்தை கூகுள் டூடுலில் பதிவு செய்து கெளரவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சிவாஜிகணேசனின் சிஷ்யனாக தன்னை ஏற்றுக்கொண்டிருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் சிவாஜி கணேசன் பிறந்த நாளில் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருப்பதாவது: நடிப்புக் கலையின் கொடுமுடி கண்டவர். திரை ரசனையின் பொற்காலம் ஆனவர். மனங்களில் இன்னும் காலம் ஆகாதவர். என்றென்றைக்குமான கலைஞரான சிவாஜி கணேசன். பிறந்த நாளில் வணங்குகிறேன்.

சிவாஜி கணேசன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து ‘பார்த்தால் பசிதீரும், சத்யம், நாம் பிறந்த மண், தேவர் மகன் ஆகிய திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.