close
Choose your channels

'இந்தியன் 2', 'தலைவன் இருக்கின்றான்' அப்டேட் கொடுத்த கமல்!

Friday, February 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைக்காவின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வருகிறது ’இந்தியன் 2’ திரைப்படம். இந்த படத்தின் படப்பிடிப்பில் நீண்ட இடைவெளிக்குப்பின் கமல்ஹாசன் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிலையில் அரசியல் பணி, ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இவற்றுக்கிடையில் அவருடைய அடுத்த படமான ’தலைவன் இருக்கின்றான்’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் ’இந்தியன் 2’ மற்றும் ‘தலைவன் இருக்கின்றான்’ படங்கள் குறித்து கமலஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: இ’இந்தியன் 2’ படத்தின் பணிகள் வேகவேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்த மாத இறுதியில் மீண்டும் நான் நடிக்கப்போக வேண்டும். ஷூட்டிங் முடிந்தும் டெக்னிக்கலாக நிறைய வேலைகள் இருக்கின்றன. ஓடி ஓடிச் செய்த வேலையை உட்கார்ந்து படமாகப் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வம் உங்களைப்போலவே எனக்கும் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இந்தியனில் பார்த்த வேகத்தைவிட இரண்டு மடங்கு அதிவேகமாக ஷங்கர் இயங்கிக்கொண்டிருக்கிறார். ‘தலைவன் இருக்கிறான்’ படத்துக்கான வேலைகளும் நடந்துகொண்டிருக்கின்றன’ என்று கூறியுள்ளார்.

மேலும் காதலர் தினம் குறித்து கமல்ஹாசன் அதே பேட்டியில் கூறியபோது, ‘செக்‌ஷுவல் உறுப்பு என்பது காலுக்கு இடையில் இருப்பதாகச் சிலர் கற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் அது இரு காதுகளுக்கு இடையில் இருக்கிறது. அதைப் புரிந்துகொண்டால் எல்லாம் சரியாகிவிடும். உடல்தாண்டியது காதல் என்பதை இந்தத் தலைமுறை வெகுசீக்கிரத்தில் புரிந்துகொள்ளும் என நினைக்கிறேன். அதற்கான சாத்தியங்கள் இப்போது நிறையவே இருக்கின்றன’ என்றார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.