close
Choose your channels

ராகுல் காந்திக்கு வாழ்த்து கூறிய கமல்ஹாசன்: என்ன காரணம் தெரியுமா?

Sunday, June 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து கூறி டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 300 கோடியை தாண்டி வசூல் செய்து 400 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கமல்ஹாசனை பல திரையுலக பிரபலங்கள் நேரில் சந்தித்து அவரது ’விக்ரம்’ வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் கமல்ஹாசனும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல பிரபலங்களை சந்தித்து வருகிறார் என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது 52வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் ராகுல் காந்திக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீண்ட நெடுங்காலம் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியமுடன் ராகுல் காந்தி வாழ வேண்டும் என்று கமல்ஹாசன் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கிய ஆரம்பத்தில் ராகுல்காந்தியை டெல்லியில் நேரில் சந்தித்து ஒரு சில முக்கிய ஆலோசனைகள் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.