close
Choose your channels

ரஜினியுடனான மோதலை தவிர்க்க கமல் போட்ட திட்டம்

Wednesday, November 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஏப்ரல் 14ல் இந்த படம் வெளிவரவும் ஒரு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்துள்ள 'விஸ்வரூபம் 2' படத்தின் படப்பிடிப்பும் முடியும் நிலையில் உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து கூறிய படக்குழுவினர் 'ஜனவரியில் 'விஸ்வரூபம் 2' படத்தை வெளியிட கமல் சார் திட்டமிட்டுள்ளார். '2.0' ஜனவரியில் வெளிவந்தால், ஏப்ரலில் 'விஸ்வரூபம் 2' வெளியாகும். '2.0' ஏப்ரல் வெளியீட்டிற்கு தள்ளப்பட்டால், ஜனவரியில் 'விஸ்வரூபம் 2' வெளியாகும்' என்று தெரிவித்தனர்

மேலும் விஸ்வரூபம் 2' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரம் மட்டுமே பாக்கி இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பு உள்பட ஒட்டுமொத்த பணிகளையும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க கமல் திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் படம் ரிலீஸ் தேதியை முடிவு செய்த பின்னரே டிரைலர் வெளியாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

வரும் ஜனவரி முதல் தனது அரசியல் அறிவிப்புகள் வெளியாக தொடங்கும் என ஏற்கனவே கமல் கூறியிருக்கும் நிலையில் இந்த ஆண்டிற்குள் அவர் விஸ்வரூபம் 2' பணிகளை முடித்துவிடுவார் என்றே கருதப்படுகிறது. மேலும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.