close
Choose your channels

பாபநாசத்தை பாராட்டிய பிரபலங்கள்

Sunday, July 5, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் ரிலீஸாகி பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்று வருகின்றது. ஊடகங்களும், ரசிகர்களும் படத்தை பாராட்டி வரும் கோலிவுட் பிரபலங்களும் கமல்ஹாசனுக்கு பாபநாசம் படக்குழுவினர்களுக்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ராதிகா சரத்குமார்: நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பாபநாசம் படம் பார்த்தேன். ரசிகர்களை பெரிதும் கவரும் வகையில் மலையாளத்தில் இருந்து முற்றிலும் வித்தியாசமான அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்

சிவகார்த்திகேயன்: ஒரு பெரிய மேதையின் இன்னுமொரு ஆச்சரியமளிக்கும் படம்

தனஞ்செயன்: 36 வயதினிலே' படத்திற்கு பின்னர் மீண்டும் ஒரு ஒரிஜினல் படத்தின் இயக்குனர் செய்த மேஜிக்தான் 'பாபநாசம்.

வைரமுத்து: கமல்ஹாசனின் அற்புதமான நடிப்பில் வெளிவந்துள்ள மற்றுமொரு படம்

பூஜாகுமார்: புத்திசாலித்தனமான திரைக்கதையில் உருவான அற்புதமான திரைப்படம். கமல்ஹாசனின் நடிப்பு ஒப்பிடமுடியாத இதயத்தை உருக வைக்கும் பெர்பாமன்ஸ்

நடிகை மீனா: “நான், மலையாளம் மற்றும் தெலுங்கில் நடித்திருக்கிறேன். நிஜமாகவே கமல்சார் ரொம்பவே நல்லா நடிச்சிருக்காரு. படத்திற்கான புது நிறத்தை கமல்சார் தான் கொடுத்துருக்காரு. ஸ்பெஷலா அந்த படத்துக்குனு புது பாஷை கொடுத்துருக்காரு. பாபநாசம் ஏரியா பாஷை படத்துக்கு இன்னும் ப்ளஸ். கெளதமி மேம் ரொம்பவே நல்லா நடிச்சிருக்காங்க. ஏற்கெனவே நான் அவங்க கதாபாத்திரத்தில் நடிச்சேன். அவங்க நடிச்சதுல நிறைய மாற்றமும் தமிழுக்கு ஏற்றமாதிரி மாத்திருக்காங்க. ரொம்பவே அழகா பண்ணிருக்காங்க

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.