close
Choose your channels

ஆடை இந்தி ரீமேக்கில் கங்கனா ரனாவத் நடிக்கின்றாரா? அதிகாரபூர்வ தகவல்

Wednesday, October 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அமலாபால் நடிப்பில் இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'ஆடை' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் படத்தின் பணிகள் ஆரம்பமாகி விட்டதாகவும் இந்த படத்தில் அமலாபால் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இது குறித்து பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் விளக்கமளித்துள்ளார். ஆடை படத்தின் இந்தி ரீமேக் உரிமையை தனது நிறுவனம் பெற்றுள்ளதாகவும் ஆனால் இதுவரை அமலாபால் கேரக்டரில் நடிக்க நடிகை கங்கனா ரனாவத் அவர்களிடம் அணுகவில்லை என்றும் கூறியுள்ளார். ஆடை இந்தி ரிமேக்கில் அமலாபால் கேரக்டரில் கங்கனா ரனாவத் நடிப்பதாக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் தவறானவை என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமலாபால் நடித்த போல்டான கேரக்டரில் நடிப்பது யார் என்பது குறித்த தகவல் மற்றும் இந்த படத்தை இயக்குபவர் யார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.