close
Choose your channels

'சென்னை 28' பட நடிகரின் தந்தைக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

Tuesday, August 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் மட்டுமின்றி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் பாதித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த சில நாட்களாக தினமும் 2 எம்எல்ஏக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்எல்ஏக்கள் எம்பிக்கள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பியும், தொழிலதிபருமான வசந்தகுமார் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வந்துள்ளது. இவரின் மகன் விஜய் வசந்த் ‘சென்னை 600028’ உட்பட பல திரைப்படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வசந்தகுமார் எம்பியின் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே பல எம்எல்ஏக்கள் எம்பிக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு எம்பிக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.