close
Choose your channels

கார்த்தியின் அடுத்த பட பூஜை: இயக்குனர், இசையமைப்பாளர் யார்?

Sunday, November 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான கார்த்தி தற்போது ’சுல்தான்’ மற்றும் ’பொன்னியின் செல்வன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் ’சுல்தான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

இந்த நிலையில் கார்த்தி நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கார்த்தியின் அடுத்த படத்தை ’இரும்புத்திரை’ மற்றும் ’ஹீரோ’ படங்களை இயக்கிய இயக்குனர் பிஎஸ் மித்ரன் அவர்கள் இயக்க உள்ளதாகவும் இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தியுடன் மித்ரன், ஜிவி பிரகாஷ் இணையும் புதிய படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன்குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் பூஜை தீபாவளி நன்னாளில் பூஜையுடன் பாடல் பதிவு ஆரம்பமானது. இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், படப்பிடிப்பு போன்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.