பிரிந்த சகோதரர்களை இணைத்து வைத்த 'கடைக்குட்டி சிங்கம்': கார்த்திக் பெருமிதம்

  • IndiaGlitz, [Monday,July 16 2018]

கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு திரைப்படம் வெற்றி என்பதற்கு ஆதாரம், அந்த படம் ரிலீஸ் ஆன பின்னர் வரும் முதல் திங்கட்கிழமையில் கிடைக்கும் வசூலை பொறுத்துதான் என்று விநியோகிஸ்தர்கள் கூறுவதுண்டு.

அந்த வகையில் இன்றும் இந்த படத்திற்கு குடும்பம் குடும்பமாக திரையரங்கில் மக்கள் குவிந்ததில் இருந்தே இந்த படத்தின் வெற்று உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியதாவது: இந்த படத்தை வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி. குடும்பத்தோடு அனைவரும் இந்த படத்தை பார்த்து வருவதாக கிடைத்திருக்கும் செய்தியால் மகிழ்ச்சி

குடும்பத்தில் குறை, நிறைகள் இருப்பது சகஜம். ஆனாலும் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக இருக்க வேண்டும். இதைத்தான் 'கடைக்குட்டி சிங்கம்' உணர்த்தியுள்ளது. இந்த படத்தை பார்த்து, பேசாமல் இருந்த இரண்டு சகோதரர்கள் பேசிக்கொண்டதாக ஒருவர் மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனை பார்த்ததும் கிடைத்த சந்தோஷத்தை வெளியிட வார்த்தையே இல்லை என்று கார்த்தி கூறியுள்ளார்.

 

More News

இயக்குனர்களும் நடிக்க வந்து சாகடிக்கிறாங்க: நடிகர் சித்தார்த்

இயக்குனர்களும் நடிக்க வந்து சாகடிக்கிறாங்க: நடிகர் சித்தார்த்

சாதனை செய்த தங்கமங்கையின் சாதியை தேடிய நெட்டிசன்கள்

பின்லாந்து நாட்டில் நடைபெற்ற நடந்த உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 400 மீட்டர் ஓட்டத்தில் 51.46 வினாடிகளில் இலக்கை

யோகிபாபு கெட்டப்பை ரசித்த விஜய்: வரலட்சுமி வெளியிட்ட வீடியோ

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போதைய படப்பிடிப்பில் விஜய்யுடன்

இந்தியா-இங்கிலாந்து போட்டியில் ஒரு காதல் புரபோசல்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நடந்தது. இந்திய அணி தோல்வி அடைந்தாலும், 10 ஆயிரம் ரன் அடித்த வீரர்களின் பட்டியலில் தோனி இணைந்தார்.

ஸ்ரீரெட்டி விவகாரம் குறித்து ஆர்.கே.செல்வமணி கருத்து

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீதும், தமிழ்லீக்ஸ் என்ற பெயரில் கோலிவுட் திரையுலக பிரபலங்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார்.