close
Choose your channels

சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ்? கார்த்திக் சுப்புராஜ் திட்டம்!

Saturday, April 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கடந்த 2014ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவான திரைப்படம் ’ஜிகர்தண்டா’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது 8 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில் ’ஜிகர்தண்டா’ இரண்டாம் பாகத்தில் முக்கிய வேடத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் ஒரு பான் - இந்தியா நடிகரும் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபைவ்ஸ்டார் கிரியேஷன் கதிரேசன் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ’ஜிகர்தண்டா’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த பாபி சிம்ஹா இந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.