close
Choose your channels

பிப்ரவரியில் முக்கிய நாளை குறி வைத்த கவினின் 'ஸ்டார்' குழுவினர்.. அடுத்த படமும் ரெடி..!

Wednesday, November 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவின் நடித்த நான்காவது திரைப்படம் ‘ஸ்டார்’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தை பிப்ரவரியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

கவின் அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஸ்டார்’. இளன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா திசையில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஜனவரி முதல் டீசர், ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா என புரமோஷன் பணிகளையும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கவின் நடித்து வரும் ஐந்தாவது படத்தின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.