close
Choose your channels

'டாடா' வெற்றியை அடுத்து கவினின் அடுத்த படம்.. இயக்குனர் இந்த பிரபலமா?

Wednesday, March 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவின் நடித்த 'டாடா’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தின் வசூல் அனைத்து தரப்பினருக்கும் லாபத்தை கொடுக்கும் வகையில் இருப்பதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி ஓடிடியிலும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய தயாரிப்பாளர் அம்பேத்குமார் அடுத்த சிவகார்த்திகேயன் கவின் தான் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கவின் நடித்த 'டாடா’ படத்தின் வெற்றி காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கூறப்பட்டது.

அந்த வகையில் தற்போது வந்துள்ள தகவலின்படி கவின் அடுத்த படத்தை இயக்குவது டான்ஸ் மாஸ்டர் சதீஷ் என்று தகவல் வெளியாகி உள்ளன. இந்த படத்தை ரோமியோ பிச்சர்ஸ் ராகுல் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'எனை நோக்கி பாயும் தோட்டா’ விஜய்யின் ’மாஸ்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’, எஸ்எஸ் ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’, தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’ உள்பட பல படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ள சதீஷ் தற்போது இயக்குனராக உருவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.