கவினிடம் ஏற்பட்ட அட்டகாசமான மாற்றம்: சமூக வலைத்தளங்களில் வைரல்!
தொலைக்காட்சி தொடரில் நடித்து அதன்பின் பெரிய திரையிலும் நடிகரான நடிகர் கவின், பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3வது சீஸனில் கலந்து கொண்டு இளைஞர்களின் ஹீரோ என புகழப்பட்டார். குறிப்பாக அவர் டைட்டில் வின்னராகும் வாய்ப்பு அதிகமாக இருந்தும் நண்பர்களுக்காக விட்டுக்கொடுத்து போட்டியிலிருந்து விலகியது அனைவரையும் கவர்ந்தது. கடைசிவரை அவர் போட்டியில் இருந்திருந்தால் நிச்சயம் அவர் டைட்டில் வின்னர் ஆகி இருப்பார் என்றும் இருப்பினும் நண்பர்களுக்காக விட்டுக் கொடுத்துச் சென்ற அவரது தியாக மனப்பான்மை அவரது ஆர்மியினர்களை கவர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக லாக்டவுன் காரணமாக முடி வெட்டாமல், ஷேவ் செய்யாமல் தாடியுடன் இருந்த கவின், திடீரென தற்போது வித்தியாசமான கெட்டப்பில் மாறியுள்ளார். இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில், தாடியையும் ட்ரிம் செய்து இருக்கும் இந்த கெட்டப், கிட்டத்தட்ட ’என்னை அறிந்தால்’ அருண்விஜய் கெட்டப் போலவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இது எந்த படத்துக்கான கெட்டப் என்பதை கவின் சொல்லவில்லை என்றாலும் இந்த கெட்டப் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். கவின் தற்போது ’லிப்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் அவருடன் ’பிகில்’ திரைப்படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் மற்றும் காயத்ரி ரெட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது