close
Choose your channels

ஆர்கே சுரேஷ் வில்லனாக மிரட்டும் 'ஒயிட் ரோஸ்'.. 'கயல்' ஆனந்தி படத்தின் டிரைலர்..!

Sunday, March 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’கயல்’ ஆனந்தி முக்கிய வேடத்திலும் ஆர்கே சுரேஷ் வில்லனாகவும் நடித்து மிரட்டிய ‘ஒயிட் ரோஸ்’ என்ற படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’கயல்’ ஆனந்தி தனது ஒரே மகளை தொலைத்து விட்டு அவரை தேடி வரும் நிலையில் வில்லன் ஆர் கே சுரேஷ் அவருக்கு கொடுக்கும் தொல்லைகள் அதிலிருந்து ’கயல்’ ஆனந்தி எப்படி தனது மகளை மீட்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என டிரைலரில் இருந்து தெரிகிறது.

முழுக்க முழுக்க த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் காட்சிகளுடன் அமைந்துள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வைரல் ஆகிவரும் நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் ஐந்தாம் தேதி திர திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

’கயல்’ ஆனந்தி நடித்த 'மங்கை’ திரைப்படம் கடைசி நேரத்தில் எதிர்பாராத காரணத்தினால் ரிலீஸ் ஆகாத நிலையில் இந்த படம் அவருக்கு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆர்கே சுரேஷ் இந்த படத்தில் வில்லனாக மிரட்டி இருக்கும் நிலையில் அவருக்கும் இந்த படம் திருப்புமுனையை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.