close
Choose your channels

திருமணமான தங்கையை அடைய கணவருக்கு அனுப்பிய ஆபாச படம்: டிவி சீரியல் நடிகர் உள்பட 3 பேர் கைது!

Monday, October 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணமான தங்கையை மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அவருடைய கணவருக்கு ஆபாசப்படம் அனுப்பிய டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சுபு. இவர் தனது தங்கை முறை உள்ள பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார். ஆனால் அவருக்கு ஏற்கனவே ஒரு வாலிபருடன் திருமணம் நடந்துவிட்டது. இதனை அடுத்து தங்கையையும் அவரது கணவரையும் பிரிக்க, அவரது கணவருக்கு மொட்டை கடிதம் மற்றும் தங்கையின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பினார்.

இதுகுறித்து அவரது தங்கையின் கணவர் காவல் நிலையத்தில் புகார் செய்யப் போகும்போது டாக்டர் சுபுவும் அவருடன் உடன் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தங்கையின் உறவினர்களுக்கும் டாக்டர் சுபு ஆபாச படங்களை அனுப்பி உள்ளார். இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த தங்கை தனது கணவர் தான் ஆபாச படங்களை தனது உறவினருக்கு அனுப்பி இருப்பதாக சந்தேகப்பட்டு, அவரிடம் இருந்து பிரிந்து வாழ தொடங்கினார். மேலும் கணவர் மீது புகார் காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் போதும் அவருடன் டாக்டர் சுபு உடன் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காவல்துறையினர் இதுகுறித்து தீவிரமாக விசாரித்தபோது ஆபாச படம் அனுப்பப்பட்ட சிம்கார்டை கண்டுபிடித்தனர். அந்த சிம் கார்டு டாக்டர் சுபுவின் நண்பரான டிவி நடிகருடையது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அவரிடம் தங்கள் பாணியில் போலீசார் விசாரணை செய்ததில் டாக்டர் சுபு கூறியதன் பேரில் அவரது தங்கைக்கு ஆபாச படம் அனுப்பியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து காவல்துறையினர் டாக்டர் சுபு, டிவி நடிகர் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தங்கை முறை உள்ள பெண்ணை அடைவதற்காக அவருடைய கணவருக்கு ஆபாசப்படம் அனுப்பிய டிவி நடிகர் மற்றும் டாக்டர் சுபுவால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.