close
Choose your channels

'வருஷம் 16' குஷ்பு மாதிரியே இருக்கீங்க.. குஷ்பு மகள் புகைப்படத்திற்கு குவியும் கமெண்ட்ஸ்..!

Wednesday, June 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை குஷ்பு தனது மூத்த மகளின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ’வருஷம் 16’ குஷ்பு மாதிரி இருக்கிறார் என கமெண்ட் குவிந்து வருகிறது.

நடிகை குஷ்பு, இயக்குனர் சுந்தர் சி அவர்களை கடந்த 2000 ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு அவந்திகா, அனந்திதா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் குஷ்பு அவ்வப்போது தனது மகள்கள் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அவர் குஷ்புவின் மூத்த மகள் அவந்திகாவின் வித்தியாசமான மேக்கப் உடன் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்க்கும் போது சின்ன வயது குஷ்பு மாதிரி இருக்கிறது என்றும் குறிப்பாக ’வருஷம் 16’ குஷ்பு மாதிரி இருப்பதாக கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் மற்றும் கமெண்ட் குறைந்து வருகிறது.

கார்த்தியுடன் குஷ்பு நடித்த ‘வருஷம் 16’ திரைப்படம் அவருக்கு தமிழில் இரண்டாவது படம் என்பதும், அந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு 19 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.