close
Choose your channels

கேபிஒய் பாலா காலில் விழுந்த சிறுவனின் தந்தை.. என்ன நடந்தது? வைரல் வீடியோ..!

Wednesday, April 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு சிறுவனுக்கு கேபிஒய் பாலா நெகிழ்ச்சியான உதவி செய்ததை அடுத்து அந்த சிறுவனின் தந்தை பாலா காலில் விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதை அடுத்து பாலாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா அதன் பின்னர் ’குக் வித் கோமாளி’ உட்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் என்பதும் ஒரு சில திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் கோடிகணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் கூட செய்யாத உதவிகளை ஒரு சில லட்சங்கள் மட்டுமே சம்பளம் வாங்கும் பாலா செய்து வருகிறார் என்பதும் அவர் தனது வருமானத்தில் கிட்டத்தட்ட முழுவதையுமே சமூக சேவைகளுக்கு செய்து வருகிறார் என்பதையும் பார்த்தோம்.

சமீபத்தில் கூட மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனம் வாங்கி கொடுத்தது, பெண் ஒருவருக்கு ஆட்டோ வாங்கி கொடுத்தது, இளைஞர் ஒருவருக்கு பைக் வாங்கி கொடுத்தது ஆகியவை குறித்த தகவல் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தால் மாதேஸ்வரன் என்ற சிறுவனின் கண் பார்வை போனதை அடுத்து அந்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய சில லட்சங்கள் செலவாகும் என்பதால் அந்த சிறுவனின் தந்தை பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்த பாலா உடனடியாக அந்த சிறுவனின் வீட்டுக்கு சென்று அவருடைய தந்தையிடம் சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு தேவையான பணத்தை கொடுத்து உதவியுள்ளார். இந்த பணத்தை அவர் ராகவா லாரன்ஸ் உதவியுடன் கொடுத்ததாகவும் சிறுவனின் கண் ஆபரேஷனுக்கு தேவையான வேலையை ஆரம்பியுங்கள் என்றும் அவர் கூறினார்.

பாலா செய்த உதவியை பார்த்ததும் நெகிழ்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை பாலாவின் காலில் விழுந்தது வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் பாலா செய்த உதவிக்கு நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.