close
Choose your channels

நடிகை குஷ்பு கைது!

Tuesday, October 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூ சிதம்பரம் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது திடீரென முட்டுக்காடு அருகே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இந்து பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டது/ இதனையடுத்து திருமாவளவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவருடைய சொந்த தொகுதியான சிதம்பரத்தில் போராட்டம் நடத்த பாஜக மகளிரணி திட்டமிட்டது. இந்த போராட்டத்தில் நடிகை குஷ்பு மற்றும் சசிகலா புஷ்பா எம்பி கலந்து கொள்வதாக இருந்தது

இந்த நிலையில் சிதம்பரத்தில் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று அதிகாலை சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி நடிகை குஷ்பு காரில் சென்று கொண்டிருந்தபோது முட்டுக்காடு அருகே காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்து பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனை அறவழியில் கண்டித்து போராட்டம் செய்ய பாஜக மகளிரணி திட்டமிட்டுள்ளதாகவும் ஆனால் போலீசார் அதனை தடுத்து நிறுத்தி உள்ளதாகவும் பாஜகவினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.