'அரண்மனை 3' ரிலீஸ் குறித்து குஷ்பு டுவிட்!

  • IndiaGlitz, [Tuesday,September 14 2021]

சுந்தர்சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘அரண்மனை 3’படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவுற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவலை தயாரிப்பாளர் குஷ்பு வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யூஏ சான்றிதழ் அளித்துள்ளதாகவும் இதனை அடுத்து இந்த படம் அடுத்த மாதம் திருவிழா நேரத்தில் வெளியாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படம் அக்டோபர் 13ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறை நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரண்மனை, அரண்மனை 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்திற்கு ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுந்தர்சி,ஆர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகிய மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். மேலும் விவேக், யோகிபாபு, குஷ்பூ, கோவை சரளா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார் என்பதும், செந்தில்குமார் ஒளிப்பதிவில் ஃபென்னி ஒலிவர் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை குஷ்பு மற்றும் சுந்தர் சி தயாரித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'வலிமை' குறித்து போனிகபூரின் டுவிட் வைரல்!

தல அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் 'வலிமை'. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் நடைபெற்றது

கால்பந்தில் கலக்கும் முதல்வர் ஸ்டாலின் பேரன்: எந்த அணியில் இடம்பெற்றார் தெரியுமா?

முன்னாள் தமிழக முதல்வர் மு கருணாநிதி அவர்களின் வாரிசு முக ஸ்டாலின் அவர்கள் தற்போது தமிழக முதல்வராக இருந்து வருகிறார் என்பதும், முக ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது

ரஜினியே பாராட்டிய 'தலைவி' திரைப்படத்தின் 3 நாள் வசூல் எப்படி?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தலைவி' திரைப்படத்தின் 3 நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சின்னத்திரையில் இசைஞானி இளையராஜா: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு போட்டியா?

விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக பிக்பாஸ், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்

'சந்திரமுகி' குழந்தை நட்சத்திரம் பொம்மிக்கு திருமணம்: வைரல் புகைப்படங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' திரைப்படத்தில் பொம்மி என்ற குழந்தை நட்சத்திர கேரக்டரில் நடித்தவருக்கு தற்போது திருமணமாகி உள்ளதை அடுத்து திருமண புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.