close
Choose your channels

சின்னத்திரையில் இசைஞானி இளையராஜா: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு போட்டியா?

Tuesday, September 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக பிக்பாஸ், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இணையாக சன் டிவி மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை அறிமுகம் செய்தது. விஜய் சேதுபதி தொகுப்பாளராக வரும் இந்த ஷோ, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்ததாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு இணையாக ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த சன் டிவி திட்டமிட்டுள்ளதாகவும் அதில் இளையராஜா கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்றை சன் டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் மேலும் இந்த நிகழ்ச்சி குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’ராஜபார்வை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியை பிரபல யூடியூப் சேனல் பிளாக் ஷீப் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. சன் டிவியில் இளையராஜா கலந்து கொள்ளும் இந்த இசை நிகழ்ச்சி இசை இரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos