close
Choose your channels

'சந்திரமுகி' குழந்தை நட்சத்திரம் பொம்மிக்கு திருமணம்: வைரல் புகைப்படங்கள்!

Tuesday, September 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ திரைப்படத்தில் பொம்மி என்ற குழந்தை நட்சத்திர கேரக்டரில் நடித்தவருக்கு தற்போது திருமணமாகி உள்ளதை அடுத்து திருமண புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம் ’சந்திரமுகி’. இந்த படத்தில் ஒரு பாடலில் பொம்மி என்ற கேரக்டரில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் பிரகர்ஷிதா. இந்த படத்தில் இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்றதை அடுத்து, பிரகர்ஷிதா ஒரு சில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரகர்ஷிதாவுக்கு தற்போது திருமணம் முடிந்துள்ளது. தனது கணவருடன் கூடிய புகைப்படங்களை இவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததை அடுத்து இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ’சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராக உள்ளதை அடுத்து இந்த படத்திலும் பிரகர்ஷிதா நடிப்பாரா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.