close
Choose your channels

சென்னையின் எப்.சி டீசர்ட்டில் குட்டித்தல ஆத்விக்.. ஷாலினியுடன் இருக்கும் புகைப்படம் வைரல்..!

Friday, February 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் - ஷாலினி நட்சத்திர தம்பதியின் மகன் ஆத்விக் சென்னையின் எப்சி டிஷர்ட் உடன் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி போலவே ஐஎஸ்எல் லீக் என்ற கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் சென்னையின் எப்சி என்ற அணியும் கலந்து கொள்ளும் என்பதும் தெரிந்ததே.

பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் தல தோனி ஆகியோர்களுக்கு சொந்தமான இந்த அணி சென்னையின் பெயரைக் கொண்டுள்ளதை அடுத்து தமிழகத்தில் இந்த அணிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று சென்னையின் எப்சி மற்றும் நார்த் ஈஸ்ட் யூனைடெட் ஆகிய அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியை பார்ப்பதற்காக அஜித்தின் மனைவி ஷாலினிஅஜித் தனது மகன் ஆத்விக் உடன் வந்திருந்த நிலையில் ஆத்விக் சென்னையின் எப்சி டீசர்ட்டை அணிந்து இருந்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.